சாயப்பூங்கா அமைவதற்கான திட்டமிடலை தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 24 July 2022

சாயப்பூங்கா அமைவதற்கான திட்டமிடலை தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை.

தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய ஐந்தாவது மாநாடு ஒன்றிய தலைவர் P. ராமசாமி அவர்கள் தலைமையில் தட்டாங்குட்டை , பள்ளிகாடு,கண்ணப்ப நாயனார் மண்டபத்தில் 24.7.2022 அன்று நடைபெற்றது. முன்னதாக மாநாட்டு கொடியினை மூத்த தோழரும் மாவட்ட குழு உறுப்பினருமான தோழர் P. சண்முகம் கொடியேற்றி வைத்தார்.


மாநாட்டில் K. நாகராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார், வருகை தந்த பிரதிநிதிகளை M.மணிகண்டன் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார், மாநாட்டை துவக்கி வைத்து சங்கத்தின் மாவட்ட தலைவர் A. ஆதிநாராயணன் துவக்கவுரை ஆற்றினார்.


கடந்த மாநாட்டிற்கு பிறகு நடைபெற்ற வேலை அறிக்கை, வரவு மற்றும் செலவு அறிக்கையினை ஒன்றிய செயலாளர் M. தனேந்திரன் சமர்ப்பித்தார், மாநாட்டில் விவாதத்திற்கு பிறகு தொகுப்புரை வழங்கப்பட்டு கீழ்க்கண்ட புதிய கமிட்டி மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவராக T. மாணிக்கராஜ், செயலாளராக M. தனேந்திரன், பொருளாளராக வேலுச்சாமி, உதவி தலைவர்களாக P. சண்முகம், S. பழனிசாமி M. குப்புசாமி, K .கோவிந்தராஜ், உதவி செயலாளர்களாக K நாகராஜ், தேவராஜன், கார்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர், மேலும் புதிய கமிட்டி மற்றும் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தியும் சங்கத்தின் மாவட்ட விவசாய செயலாளர் P. பெருமாள் நிறைவுரையாற்றினார், இறுதியாக S. கனகசண்முகம் நன்றியுரை ஆற்றினார்.

மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 1. எலந்தக்குட்டை ஊராட்சி பெதக்காட்டூர், புதுப்பாளையம் பகுதியில் சாயப்பூங்கா அமைப்பதற்கான திட்டமிடல் என்பது நடைபெற்று வருகிறது குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள சாயப்பட்டறை கழிவுகளை கொண்டு வந்து இப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடு உள்ளதாக தெரிய வருகிறது. இப்பகுதியில் இந்நிலையம் திட்டமிடல் நடைபெற்றால் இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களின் விவசாயிகளுடைய நிலம் மற்றும் நீர் மாசுபட்டு ஒட்டுமொத்தமான வாழ்வாதாரமே பாதிக்கப்படும். ஆகவே அரசு சாயப்பட்டறைகள் உள்ள இடங்களிலேயே இதற்கான சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்திடவும் இப்பகுதியில் சாயப் பூங்கா அமைவதை தடுத்து நிறுத்தி இப்பகுதி விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும்.
 2. தட்டாங்குட்டை ஊராட்சி அருவங்காடு பகுதியில் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்காவில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பள்ளத்தில் தங்குவதல் சுற்றுவட்டார  பகுதி நிலத்தடி நீர் மாசுபடுகிறது. நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
 3. விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதால் விவசாயிகள் பெரிதும் பதிப்படைகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்  அடிப்படையில் மரம்,பயிர் நிலத்திற்கான இழப்பீட்டை கூடுதலாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
 4. மேட்டூர் உபரி நீரை பயன்படுத்தி நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளை நிரப்பிடவும் நிலத்தடி நீரை உயர்த்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்
 5. வேளாண் விஞ்ஞானி M.S. சாமிநாதன் பரிந்துரை அடிப்படையில் உற்பத்தி செலவுடன் 50% கூடுதலாக இணைத்து குறைந்தபட்ச ஆதார விலையை விவசாய உற்பத்தி பொருளுக்கு தீர்மானிக்க வேண்டும்.
 6. பாலின் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய் 10 உயர்த்தி பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 42 எருமை பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 52 வழங்கிட வேண்டும். மாட்டு தீவனத்தை 50% மானிய விலையில் வழங்கிட வேண்டும்.
 7. நெல் அறுவடை காலத்தில் இப்பகுதியில் போதுமான நெல் கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையம் இல்லை. ஆகவே தொலைவில் உள்ள மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது எனவே கல்லாங்காடு வலசு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும்.
 8. அனைத்து ஊர்களுக்கும் விவசாயக்களம் அமைத்து தர வேண்டும்.
 9. அனைத்து கிராமங்களுக்கும் பொது கழிப்பிடம் உள்ளிட்ட சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும்.
 10. 60 வயது முதிர்ந்த நலிவடைந்த விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்கிட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். 
 11. அருவங்காடு, செங்காடு பகுதிக்கு குடிநீர் வசதி, ரேஷன் கடை மற்றும் நிழல் கூடம் அமைத்து தர வேண்டும்.
 12. மின்சாரத்தை தனியார் மயமாகும் மின்சார வரைவு மசோதா 2021-யை திரும்ப பெற வேண்டும். அனைவருக்கும் இலவச மின்சாரம் கிடைத்திட உறுதி செய்திட வேண்டும். மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உடனே மும்முனை மின்சாரம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 13. கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 5000 விலை தீர்மானித்திடவும்,ஆலை நிர்வாகம் வைத்திருக்கும் பாக்கியை உடனே வழங்கிட வேண்டும். கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலையை SAP அறிவித்து கரும்பு விலையை நிர்ணயித்திட வேண்டும்.
 14. விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட்டாக மாற்றி பிளாட் போட்டு விற்பதை தடுத்து நிறுத்திட வேண்டும். விளைநிலங்களை பாதுகாத்து உணவு பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
 15. வீரப்பன் பாளையம் வேலாங்காடு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஏரி/பெரிய குளம் அமைத்து தரப்பட வேண்டும்.
 16. பால், தயிர் மற்றும் அதன் உப பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி மற்றும் பால் தொழில் சார்ந்த உப பொருள்களுக்கு மத்திய அரசினால் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது உடனடியாக அதனை  வாபஸ் பெற வேண்டும். என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- நாமக்கல் மாவட்ட செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad