வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு மாற்று இடம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 5 August 2022

வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு மாற்று இடம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்.

காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு ஓராண்டுக்குள் மாற்று இடம் வழங்கப்படும் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.


மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது இதன் காரணமாக குமராபாளையம் காவேரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 115 குடும்பங்களை சேர்ந்த முன்னுருக்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


நகராட்சி அருகில் உள்ள காவேரிபடுத்துறையில் 17 படிக்கட்டுகள் உள்ளன இந்த வெள்ளப்பெருக்கால் அனைத்து படிக்கட்டுகளும் மூழ்கி 14 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது கடந்த இரண்டு நாட்களாக ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆற்றின் காலத்தில் இருந்து காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை ரசித்து பார்க்கின்றனர்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பழைய பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு கருவி தாழ்வான பகுதிகளில் தீயணைப்பு படையினர் ரப்பர் விதவை ஜாக்கெட்டுகள் கயிறுகள் ஆகிவிட்டவுடன் தயார் நிலையில் உள்ளனர் இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் குமாரபாளையம் காவேரி கரையோர பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அவருடன் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ் வி உதவி கலெக்டர் இளவரசி துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் உடன் சென்றனர்.


இந்த நிலை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரேயா சிங் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் முகாமிட்டு அங்கிருந்தபடி முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு வெள்ளை நிலவரம் பாதிப்பு குறித்து தகவல் தெரிவித்து வருகிறார் முன்னதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியது :தற்போது மேட்டூர் அணையில் வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் குமராபாளையத்தில் கரையோரப் பகுதியில் உள்ள 80க்கும் மேற்பட்ட வீடுகளில் இதுவரை வெள்ள நீர் புகுந்துள்ளது பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் முகாம் அனைத்து அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது மேலும் குமாரபாளையத்தில் காவேரி கரையோரம் பட்டா நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


மீண்டும் இதுபோல் வெள்ளை பாதிப்பு ஏற்படுவதற்குள் ஓராண்டுக்குள் அவர்களுக்கான மாற்று இடம் வழங்க பணியில் நடைபெற்று வருகிறது தடுப்பு சுவர் அமைக்க திட்ட மதிப்பீடு செய்ய உள்ளது இவ்வாறு அவர் கூறினார் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad