குமாரபாளையம் பள்ளிபாளையம் காவேரி கரையோர பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் ஆய்வு. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 6 August 2022

குமாரபாளையம் பள்ளிபாளையம் காவேரி கரையோர பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் ஆய்வு.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் ஆய்வு நடத்தினர்.

கர்நாடகத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர்  திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதன் காரணமாக  குமாரபாளையம் காவேரி கரையோர பகுதிகளில் வசித்த சுமார் 135 குடும்பங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.


இந்த நிலையில் காவிரியில் வெள்ளப்பெருக்கால் குமாரபாளையத்தில் உள்ள பழைய பாலத்தில் போக்குவரத்துக்கு தடை போடப்பட்டது மேலும் தாழ்வான பகுதிகளில் தீயணைப்பு நிலையம் சார்பில் ரப்பர் ட்யூப்பில் மிதவை ஜாக்கெட்டுகள் மற்றும் கயிறுகள் ஆகியவைகளை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் இதற்கிடையே நேற்று தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 22 வீரர்கள் குமாரபாளையம் வந்தனர்.


அவர்கள் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி தலைமையில் வாகனங்களில் சென்று தாழ்வான பகுதிகளான அண்ணா நகர் கலைமகள் தெரு இந்திரா நகர் மணிமேகலை தெரு மேட்டுக்காடு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ள வீடுகளை பார்வையிட்டனர் எனினும் நேற்று மாலை முதல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருகிறது இதே கோல் பள்ளிபாளையத்துக்கு நேற்று தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 40 பேர் வந்தனர் அவர்கள் பள்ளிபாளையம் காவேரி கரையோர பகுதிகள் தாழ்வான பதிவுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர், அவர்களுடன் திருச்செங்கோடு துணை கோடு சூப்பிரண்டு மகாலட்சுமி தலைமையில் போலீசார் சென்றனர்.



- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad