குப்பை வண்டியில் உணவு கொண்டுவந்த நகர் மன்ற தலைவர், பொதுமக்கள் முகம் சுழிப்பு. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 August 2022

குப்பை வண்டியில் உணவு கொண்டுவந்த நகர் மன்ற தலைவர், பொதுமக்கள் முகம் சுழிப்பு.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெள்ள பாதிப்பு காரணமாக முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு வழங்குவதற்காக உணவுப் பொருட்கள் நகராட்சி குப்பை சேகரிக்கும் வண்டியில் கொண்டுவரப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் காவிரியில் 2 லட்சத்து பத்தாயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது இதனை அடுத்து குமராபாளையம் பள்ளிபாளையம் சுற்றியுள்ள காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள பொதுமக்களை பத்திரமாக மீட்டு புதன் சந்தை பகுதியில் தனியார் திருமண மண்டப முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு பள்ளிபாளையம் திமுக நகர மன்ற தலைவர் செல்வராஜ் தனது சொந்த செலவில் உணவு வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தார்.


அப்போது அவர்களுக்கு கொண்டுவரப்பட்ட உணவு நகராட்சியின் பொது வாகனத்தில் கொண்டு வராமல் உணவை அவமதிக்கும் வகையிலும் பொதுமக்களை அலட்சியமாக பார்க்கும் வகையில் நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை சேகரிக்கு செல்லும் வாகனத்தில் கொண்டுவரப்பட்டதால் முகாமில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா? எனக் கேள்வி எழுந்துள்ளது இதனால் நகராட்சி ஆணையாளர் அலட்சியமாக செயல்பட்ட நகராட்சி ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad