திருச்செங்கோடு அருகே சோகம் கார் - மோட்டார் சைக்கிள் மோதல்; புதுப்பெண் உட்பட 3 பேர் பலி. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 1 September 2022

திருச்செங்கோடு அருகே சோகம் கார் - மோட்டார் சைக்கிள் மோதல்; புதுப்பெண் உட்பட 3 பேர் பலி.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கார் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுப்பெண் உட்பட 3. பேர் பலியாகினர், திண்டுக்கல்லில் உள்ள போகம்கம்பூர் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் வயசு ( 35), சுப்பிரமணி வயசு ( 48) இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர் 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 


இந்த நிலையில் 2. பேரும் குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காக சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலில் கயிறு கட்டுவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சுரேஷ் ஓட்டினார் சுப்பிரமணி பின்னால் அமர்ந்திருந்தார் அவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே புளியம்பட்டி சுரங்க தோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். 


அப்போது எதிரே ஒரு காரில் திருச்செங்கோடு நெய்க்கரான் பட்டி சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் வயது (29). அவருடைய மனைவி ஜீவிதா வயசு ( 21) ஆகியோர் திருச்செங்கோடு கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர் அந்த சமயம் எதிர்பாராத விதமாக கார் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சுரேஷ் சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினர்.


மேலும் காரில் இருந்த ஜீவிதா இடுப்பாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்து வலியால் துடித்தார் ராமகிருஷ்ணன் சிறுகாயத்துடன் தப்பினார் இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த ஜீவிதா காயமடைந்த ராமகிருஷ்ணன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜீவிதா பரிதாபமாக இருந்தால் ராமகிருஷ்ணனுக்கு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இந்த விபத்துக்கு குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருச்செங்கோடு ஊரக போலீசார் பலியான சுரேஷ் சுப்பிரமணியம் ஆகியோரது உடல்களை கைப்பற்றி திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விபத்தில் பலியான ஜீவிதாவுக்கு ராமகிருஷ்ணனுக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது விபத்தில் புதுப்பெண் உட்பட மூணு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad