நகராட்சி பள்ளி ஒருங்கிணைந்த சமையல் கூட கட்டுமான பணியை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 31 August 2022

நகராட்சி பள்ளி ஒருங்கிணைந்த சமையல் கூட கட்டுமான பணியை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராஜகவுண்டம்பாளையம் நகராட்சி பள்ளியில் ரூ. 23.5 லட்சத்தில் கட்டப்படும் வரும் ஒருங்கிணைந்த சமையல் கூட கட்டுமான பணியை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடுத்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார் அதன்படி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள சின்ன பாவாடை பள்ளி, செங்கோடம்பாளையம், மாங்கொட்டைபாளையம், சட்டையும் புதூர், ராஜகவுண்டம்பாளையம், நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள நகராட்சி பள்ளிகளில் படிக்கும் 738 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.


இதற்காக திருச்செங்கோடு ராஜ கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் ரூ. 23 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சமையல் கூடும் கட்டப்பட்டு வருகிறது இதன் கட்டுமான பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது இந்த நிலையில் ஒருங்கிணைந்த சமையல் கூட்ட கட்டுமான பணியை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் கட்டிடத்தின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் அப்போது கலெக்டர் குருவியில் இந்த ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 6 அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் இதனால் அங்கு படிக்கும் 738 மாணவ மாணவிகள் காலை சிற்றுண்டி சாப்பிட்டு பயனடைவார்.  


அவர்களுக்கு காலை உணவாக திங்கட்கிழமை உப்புமா வகைகளும் செவ்வாய்க்கிழமை கிச்சடி வகைகளும் புதன்கிழமை பொங்கல் வகைகளும் வியாழக்கிழமை நுட்பமா வகைகளும் வெள்ளிக்கிழமை இனிப்பு வகைகளும் என அரசு பட்டியலில் உள்ளபடி உணவுகள் வழங்கப்படும் என்றார். ஆய்வின் போது திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன் நகராட்சி பொறியாளர் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர்.அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad