எருமப்பட்டி அருகே டிராக்டர் திருடிய 3.பேரை போலீசார் கைது செய்தனர். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 7 September 2022

எருமப்பட்டி அருகே டிராக்டர் திருடிய 3.பேரை போலீசார் கைது செய்தனர்.

எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரம் கிழக்கு தெரிவை சேர்ந்தவர் இளையராஜா வயது (34), இவர் கடந்த மாதம் 24 ஆம் தேதி இரவு இவருக்கு சொந்தமான டாக்டர் அங்குள்ள கோவில் முன்பு நிறுத்திவிட்டு வீட்டில் தூங்கி உள்ளார். அடுத்த நாள் எழுந்து பார்த்த பொழுது டிராக்டர் காணாமல் போனது தெரியவந்தது அதிர்ச்சி அடைந்த இளையராஜா காணாமல் போன டாக்டர் பல இடங்களில் தேடி பார்த்து உள்ளார் எங்கும் தேடியும் கிடைக்காததால் எருமைப்பட்டி போலீசில் இளையராஜா புகார் செய்தார். 


புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் உதவி ஆய்வாளர் பூபதி தலைமையில் தனி படை அமைத்து காணாமல் போன அன்று இரவு பதிவான சிசிடிவி காட்சிகளை பல்வேறு இடங்களில் சேகரித்து ஆய்வு செய்தார்.. இந்த ஆய்வில் நான்கு பேர் கொண்ட கும்பல் டாக்டர் திருடிய கொண்டு செல்வது பதிவாகி இருந்தது இதைக் குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் வரதராஜபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் வயசு (33) என்பவர் டிராக்டர் திருடி சென்று தோட்டத்தில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.


இதை அடுத்து அவரை கைது செய்து போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்த மூவர் வேங்கையா புரத்தைச் சேர்ந்த திருப்பதி (29). செல்லியம்பாளையம் அம்மன் கோவிலை சேர்ந்த வேல்முருகன் (42). ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் டிராக்டர் திருட்டில் உடந்தையாக இருந்த துறையூர் கலிங்க முதலியார் தெருவை சேர்ந்த ஆனந்தன் (  45). என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அங்கு பரபரப்பாக பேசப்பட்டது.


தமிழக குரல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad