அதிமுக பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட் தீர்ப்புக்கு வரவேற்பு. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 3 September 2022

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட் தீர்ப்புக்கு வரவேற்பு.

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட் தீர்ப்புக்கு வரவேற்பு, அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் பள்ளிபாளையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு, அதிமுக பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட்தீர்ப்பை வரவேற்று நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


சென்னையில் நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டம் செல்லாது இன்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான வழக்கில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தியது செல்லும் என்றும் இரண்டு தலைவர்களும் சேர்ந்து செயல்பட உத்தரவு விட முடியாது என்றும் தனி நீதிபதிகளை அளித்து உத்தரவு ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 


இந்தத் தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடும் வருகின்றனர் அதன்படி பள்ளிபாளையம் பஸ் நிலையம் நால் ரோட்டில் அதிமுகவினர் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ தலைமையில் ஒன்று கூடி பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர் இதில் பள்ளிபாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி ஒன்றிய செயலாளர் செந்தில் தொகுதி செயலாளர் சுப்பிரமணியம் பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணி ஆலம்பாளையம் நாகச் செயலாளர் செல்லத்துரை டி சி எம் எஸ் தலைவர் திருமூர்த்தி ஆனந்தூர் ஊராட்சி தலைவர் சிங்காரவேலன் புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad