நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 3 September 2022

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது.

நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வருவாய் துறையின் மூலம் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான மருத்துவ மறு மதிப்பீட்டு முகம் நடந்தது கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். 


மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் தேவிகா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் மருத்துவ ஆய்வு குழு மூலம் 14 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதன்படி குமாரபாளையம் வட்டத்தில் 12 பேரும் ராசிபுரம் வட்டத்தில் எட்டு பேரும் மோகனூர் வட்டத்தில் ஐந்து பேரும் சேந்தமங்கலம் வட்டத்தில் ஆறு பேரும் திருச்செங்கோடு வட்டத்தில் ஒன்பது பேரும் நாமக்கல் மாவட்டத்தில் எழுதின பரமத்தி வேலூர் வட்டத்தில் ஒன்பது பேரும். கொல்லிமலை வட்டத்தில் ஒருவரும் என மொத்தம் 57 பேர் கலந்து கொண்டனர் பரிசோதனைக்கு பின்னர் கண்பார்வை குறைபாடு உடைய ஒன்பது பேர் கை கால் பாதிக்கப்பட்டோர் 17 பேர் காதுகேளாத 13 பேர் மற்றும் வாய் பேச முடியாத இரண்டு பேருக்கு வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உதவி தொகை வழங்கவும் ஆறு பேருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பராமரிப்பு உதவி தொகையும் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad