மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஸ்ரேயா சிங். தகவல். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 10 September 2022

மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஸ்ரேயா சிங். தகவல்.

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயா தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: 


படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் ஐந்தாண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில் மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 200 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.  300. மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூபாய் 600 வீதம் மூன்றாண்டு காலத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது மேலும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 600 மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ. ஆயிரம் வீதம் 10 ஆண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.


இந்தத் திட்டத்தின் கீழ் தற்பொழுது 1-7-2022 முதல் 30-9-2022 வரையிலான காலாண்டிற்கு மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து ஐந்தாண்டு காலம் முடிவுற்ற பதிவுகாரர்களும் மேலும் இம்மையத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தகுதியானவர்கள் ஆவார்கள்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad