தி.மு.க .எம்.பி. ஆ. ராசா மீது நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டு இடம் பா.ஜ.க.வினர் புகார் மனு. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 17 September 2022

தி.மு.க .எம்.பி. ஆ. ராசா மீது நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டு இடம் பா.ஜ.க.வினர் புகார் மனு.

பாஜக மாநில துணைத்தலைவர் வி பி துரைசாமி தலைமையில் பாஜகவினர் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ் வி நேரில் சந்தித்து மனு அளித்தனர்.


அதில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் எம். பி சமீபத்தில் இந்துக்களின் எண்ணங்கள் மற்றும் நம்பிக்கையே அவமதிக்கும் வகையிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் பேசியிருந்தார் எனவே அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது இதில் நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி பொதுச் செயலாளர் வடிவேல் உள்ளிட்ட பா.ஜ.க. வினர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம் நகர ஒன்றிய பாஜக தலைவர் அசோக்குமார் வடக்கு தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சம்பத் சங்கர் ஆகியோர் தலைமையில் பாஜக வி னர் நேற்று பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர் பின்னர் இந்துக்கள் இந்து பெண்கள் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸிடம் புகார் மனு கொடுத்தனர் இதனால் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


- நாமக்கல் தமிழக குரல் செய்தியாளர் அந்தோணி

No comments:

Post a Comment

Post Top Ad