மாவட்டத்தில் 50 அரசு பள்ளிகளில் 2.586. மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 17 September 2022

மாவட்டத்தில் 50 அரசு பள்ளிகளில் 2.586. மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 50 அரசு பள்ளிகளில் 2.586 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒண்ணாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை வேளையில் சத்தான உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


அதன் தொடர்ச்சியாக நேற்று நாமக்கல்லில் கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்ட தொடக்க நிகழ்ச்சி நடந்தது நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். கே ஆர் என் ராஜேஷ் குமார் எம் பி ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு காலை உணவு கிச்சடி மற்றும் ரவா கேசரியை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.


தொடர்ந்து ராஜேஷ்குமார் எம்பி கலெக்டர் சுரேஷின் ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் மாணவர்களுக்கு உணவை பரிமாறினர். பின்னர் அமைச்சர் மதிவேந்தன் கலெக்டர் ஸ்ரேயா சிங் ராஜேஷ் குமார் எம் பி நகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டனர். 


நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா உணவை பரிமாறினார் மேலும் உணவு சுவையாக உள்ளதா? பிடித்துள்ளதா ?என மாணவர்களிடம் அவர் கேட்டு அறிந்தனர். இதில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரன் நகராட்சி ஆணையாளர் சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


- நாமக்கல் தமிழக குரல் செய்தியாளர் அந்தோணி

No comments:

Post a Comment

Post Top Ad