குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 6 September 2022

குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பரமத்தி வேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


ஓலப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையின் குறுக்கே மழை நீர் வெளியேறும் வகையில் குழாய் அமைக்கப்பட்டு இருந்தது. குளம் போல் தேங்கி நின்றது மழை நீரை அகற்றக் கொடி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கிறது. 


இதனால் ஆத்திரமடைந்த பாரதி நகர் பொதுமக்கள் நேற்று பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஓலப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கன மயில்சாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 


இதை எடுத்து குழாயில் ஏற்பட்ட அடைப்பு அகற்றப்பட்டு அப்பகுதியில் தேங்கி நின்ற மழைநீர் வெளியேற்றப்பட்டது இதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர் இந்த மறியலில் காரணமாக பரமத்தி வேலூர் மோகனூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி

No comments:

Post a Comment

Post Top Ad