தொடர் கனமழையின் காரணமாக ஏரி நிரம்பி 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 5 September 2022

தொடர் கனமழையின் காரணமாக ஏரி நிரம்பி 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியில் இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையின் காரணமாக ஏரி நிரம்பி 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது  இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான  ஓலப்பாளையம், தட்டான்குட்டை,கத்தேரி, ஆனங்கூர் பிரிவு,உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முழுவதும்  தொடர்ந்து கனமழை பெய்தது  இந்நிலையில் மேட்டூர் கிழக்கு கரை  வாய்க்கால் மூலம் செல்லும் தண்ணீரானது 35 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஓலப்பாளையம் ஏரி நிரம்பியிருந்த நிலையில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக  ஏரி தனது முழு கொள்ளளவை  நிரம்பியது. இதையடுத்து ஏரியிலிருந்து உபரி நீர் செல்லும் வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட  கம்பன் நகர், பெரியார் நகர், பாலிக்காடு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால்  பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.


மேலும்  வீடுகளை சுமந்துள்ள மழை நீரை வடிகால் மூலம் வெளியேற்றும் பணியில் நகராட்சி மற்றும் வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதே போன்று கத்தேரி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து கோம்புபள்ளம் ஓடையில் நீர்வரத்து  அதிகரித்துள்ளதால்  குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுப்பணித்துறையினர்  நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை  அகற்றி குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad