தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பினர் சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டு மனை பட்டா வழங்க கோரி இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தர்ணா போராட்டம் நடத்த அனுமதி இல்லை என கூறினர்.

இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆட்சியரை சந்தித்து பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் டி.எஸ்.பி சுரேஷ் . பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்தும் அவர்கள் களைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- நாமக்கல் செய்தியாளர் அந்தோணி
No comments:
Post a Comment