நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சியில் நேற்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா தலைமையில் நடைபெற்றது. இந்த கிராமசபை கூட்டத்தில் நல்லாம்பாளையம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்லும் கிழக்குகரை பாசன கால்வாய்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தனியார் வீட்டுமனைகளுக்கு வழங்கபட்ட அங்கீகரத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி கிராம மக்கள் மனு வழங்கினர்.

அதற்கு ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் மனு பெற மறுத்ததுடன் தீர்மான புத்தகத்தில் பதிவு செய்யவும் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து நல்லாம்பாளையம் கிராம மக்களை ஊராட்சி அலுவலகத்திற்கு வருமாறு கூறிவிட்டு கிராம சபை கூட்டத்தை அவசரவசரமாக முடித்துவிட்டு ஊராட்சி மன்ற தலைவர் கூறியதால் கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்தபொழுது ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஏமாற்றமடைந்த கிராம மக்கள் பூட்டு போட்ட ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கேயே உணவு சமைத்து இரவு நேரத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர் தாங்கள் வழங்கிய மனுவினை பெற்று தீர்மானம் நிறைவேற்றவேண்டும் மேலும் விதிமுறைகளை மீறி வழங்கபட்ட வீட்டுமனை அங்கீகாரத்தை ரத்து செய்யும்வரை கலைந்து செல்லமாட்டோம் என்று தெரிவித்து இன்று 2வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர் வருவாய்துறையினரும் போலிசாரும் சமரசபேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டபடாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 10 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர் இதன் காரணமாக அப்பகுதிகள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.
No comments:
Post a Comment