மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் கரத்தை வலுப்படுத்தவும் பத்தாயிரம் பேரை கட்சியில் இணைப்பேன் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் M. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர், M. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சேந்தமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ. சி சந்திரசேகரன் பங்கேற்று பேசியதாவது: 2021 தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வசம் வந்திருக்க வேண்டும். சிலர் வேண்டுமென்று திட்டமிட்டு தொகுதியில் என்னை வேட்பாளராகாமல் தடுத்தனர். இதனால் அதிமுக ஒரு தொகுதியை தெரிந்தே இழந்தது. ஓபிஎஸ் அணியில் ஏராளமான அதிமுகவினர் இணைந்து வருகின்றனர்.

அவரது கரத்தை வலுப்படுத்தவும். வகையில் சேந்தமங்கலம் கொல்லிமலையை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கட்சியில் இணைப்பேன் என்றார்.
இதில் இளைஞர் அணி செயலாளர் சரவணன் கொல்லிமலை ஒன்றிய குழு தலைவர் மாதேஸ்வரி மாவட்ட ஊராட்சிகள் உறுப்பினர் சிவப்பிரகாசம் மற்றும் ஊராட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.
No comments:
Post a Comment