நாமக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தமிழக முழுவதும் இருக்கக்கூடிய பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் சார்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரை நிமிடம் எழுந்து நின்று அரசின் கவனத்திற்கு கோரிக்கை ஈர்ப்பு நடவடிக்கை எடுத்து செல்ல தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் P. பெருமாள் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்தை ஏற்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அனைத்து பகுதி விவசாய சங்க தலைவர்களும் எழுந்து நின்று அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R ஈஸ்வரன் M.L.A அவர்களும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்க பொதுச் செயலாளர் M.G ராஜேந்திரன் உள்ளிட்டு மாவட்டம் முழுவதும் இருந்து வந்து கலந்து கொண்டனர் அனைத்து விவசாய சங்கத்தின் உடைய தலைவர்களும் பங்கேற்றனர்.
தீர்மானத்திற்கு ஆதரவளித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர் அந்தோணி
No comments:
Post a Comment