பள்ளிபாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இட ஒதுக்கீடு போராளிகள் நினைவு தினம் மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்வு நடைபெற்றது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 September 2023

பள்ளிபாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இட ஒதுக்கீடு போராளிகள் நினைவு தினம் மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்வு நடைபெற்றது.


1987-ல் நடைபெற்ற வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில், இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வானது தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் நிலையில்  அதன் ஒரு பகுதியாக பள்ளிப்பாளையம் குமாரபாளையம் சாலையில் அமைந்துள்ள அக்ரஹாரம் பகுதியில் பள்ளிபாளையம் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில்  இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. 

இந்த நிகழ்விற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் க.உமாசங்கர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் உதயகுமார் வரவேற்புரை ஆற்றினார்.. மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் முன்னிலை வகித்தார், மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன் முன்னிலை வகித்தார், மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட அமைப்பு தலைவர் செந்தில்,சிறப்பு அழைப்பார்களாக பங்கேற்றனர்.


21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.. இதனை அடுத்து தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் கரேத்தா  என்.சேகர் நகர இளைஞரணி செயலாளர் செந்தில்நாதன், நகரத் துணைத் தலைவர் ராஜா என்கின்ற ராஜசேகரன், வன்னியர் சங்க நகர செயலாளர் சின்னதுரை, ஆலாம்பாளையம் முருகன் ,நாகராஜ், மாவட்ட வன்னியர் சங்க பொறுப்பாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர் மூர்த்தி, ஒன்றிய தலைவர் ஜெயமுருகன், காளிதாஸ், பாவோட்டி மணி, லேத் சரவணன்,ஆகியோர் பங்கேற்றனர். நிறைவாக நகர தலைவர் ராஜா நன்றி உரையாற்றினார்.. ஏராளமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad