பள்ளிபாளையத்தில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 September 2023

பள்ளிபாளையத்தில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது.


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நாமக்கல் குடிமை பொருள்  வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் கொடுமை பொருள் வளங்கள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் பள்ளிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் 22 மூட்டைகளில் 50 கிலோ எடை கொண்ட 1.100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் விசாரணையில் பள்ளிபாளையம் சேர்ந்த விஜய் வயசு (40 )என்பவர் ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது இதை அடுத்து போலீசார் விஜய் கைது செய்ததோடு 1100 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad