நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் சார்பில் அரையாண்டு விடுமுறையை பள்ளி மாணவிகள் பயனுள்ளதாக்கி அவர்களின் தனி திறன்களை வெளிக்கொணரும் வகையில் *விருப்பமான விடுமுறை* என்ற செயல்பாட்டின் அடிப்படையில் அவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.
குமாரபாளையம் அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளி மாணவிகள் ஓவியம் வரைதல், திருக்குறள் ஒப்புவித்தல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் பாடல்களுக்கு நடனமாடியும் தங்களது தனித் திறன்களை வெளிப்படுத்தி பரிசுகளை பெற்றனர்.
போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகள், தங்களுக்கு இது உற்சாகமாகவும் தங்களது தனித் திறமைகளை வெளிக்கொண்டு வர வாய்ப்பாக அமைந்ததாகவும் மகிழ்ச்சியுடன் கூறினர்.
நிகழ்வில் தளிர்விடும் பாரத்தின் செயலாளர் பிரபு, உதவி பேராசிரியர் S.S. ஜெயராமன் மற்றும் ஆசிரியை தீபிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment