பரமத்தி வேலூரில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 30 July 2022

பரமத்தி வேலூரில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மத்திய மாநில. அரசுகள் தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது இந்த நிலையில் வேலூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் அவர்கள் கப்புகள் கேரி பேக் பயன்படுத்தப்படுகிறதா? என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் குணசேகரன் கிருஷ்ணன் சந்தானகிருஷ்ணன் தலைமையில் செயல் அலுவலர் சுப்பிரமணியன் துப்புரவு ஆய்வாளர் குருசாமி துப்புரவு மேற்பார்வையாளர் ஜனா ரத்தனன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஜவுளிக்கடைகள் பெட்டிக்கடைகள் ஹோட்டல்கள் டீக்கடைகள் பிளாஸ்டிக் பை விற்பனை செய்யும் கடைகள் பேக்கரிகள் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


இதில் பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பைகள் கேரிபேக் கப்புகள் பயன்படுத்துவது தெரியவந்தது இதை எடுத்து சுமார் 10 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ 3 700 அபதாரம் விதிக்கப்பட்டது மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுவித்தனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad