தண்ணீர் வரத்து அதிகரிப்பு கொல்லிமலை அருவிகளில் குளிக்க அனுமதியில்லை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவிப்பு. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 1 August 2022

தண்ணீர் வரத்து அதிகரிப்பு கொல்லிமலை அருவிகளில் குளிக்க அனுமதியில்லை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவிப்பு.

கொல்லிமலை அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை என கலெக்டர் ஸ்ரேயா சிங். தெரிவித்துள்ளார்.


நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அரசு சார்பில் நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை மறுநாள் புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வல் வில் ஓரிவிழா நடைபெற உள்ளது விழாவை ஒட்டி மலர் கண்காட்சி நடைபெற உள்ளது அரசு துறைகளில் பணி விளக்கு முகாம் கண்காட்சி சுற்றுலா விழா ஆகியவையும் நடைபெற உள்ளன. இந்த விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று பொன்னுசாமி எம் எல் ஏ முன்னிலையில் கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இதையொட்டி அவர் வாசனூர் பற்றி படகை இல்லத்தில் படகு சவாரி மேற்கொள்ள செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு புதிதாக வாங்கப்பட்டுள்ள 3 படகுகளை ஆய்வு செய்தார் தொடர்ந்து வாசனூர் பட்டி தாவரவியல் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மலர்கண்காட்சி முன்னேற்பாட்டு பணிகளையும் அற பலீஸ்வரன் கோவில் பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


பின்னர் கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வல்வில் ஓரிவிழா தொடர்பான முன்னேற்பாடு கூட்டத்தில் பேசினார் இதை அடுத்து கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறியதாவது: கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி முள்ளுக்குறிச்சி வேலிக்காடு வழி ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் போலீசாரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தாள் பறிமுதல் செய்யப்படும் எனவே சுற்றுலா பயணிகள் எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர வேண்டாம். சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை சேகரிக்க ஆங்காங்கே தொட்டியில் வைக்கப்பட்டுள்ளன அவற்றில் மட்டுமே பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களை போட வேண்டும் கடைகளில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு ரூ 5000 அபராதம் விதிக்கப்படும் எனவே கடைக்காரர்கள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கவோ விற்பனை செய்யவும் கூடாது கொல்லிமலையில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஆகாய கங்கை மாசிலா அருவி நம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து மிக அதிகமாக உள்ளது.


இதன் காரணமாக அருவி களுக்கு செல்லவும் குளிக்கவே சுற்றுலா பயணிகள் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது இருசக்கர வாகனங்களில் கொல்லிமலைக்கு வருபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் இவ்வாறு அவர் கூறினார் இந்த ஆய்வுகளின் போது நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா துணைபோலி சூப்பிரண்டு சுரேஷ் மாவட்ட வளங்கல் அலுவலர் ரமேஷ். கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மாதேஸ்வரி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad