உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ 12க்கு விற்பனை விவசாயிகள் கவலை, - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 July 2022

உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ 12க்கு விற்பனை விவசாயிகள் கவலை,

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ 12-க்கு விற்பனையானது இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர் நாமக்கல் கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர் இறுதி நாட்களில் இங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் அந்த வகையில் நேற்று 20 டன் 3/4. காய்கறிகள் மற்றும் 4/ 3/4 தன் பழங்கள் என மொத்தம் சுமார் 25/1/2 டன் விற்பனைக்கு வந்தன இவை ரூ 7 லட்சத்து 40 ஆயிரத்து 535க்கு விற்பனை செய்யப்பட்டன இவற்றை 4780 பேர் வாங்கி சென்றனர்.


நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ 12க்கும் கத்திரிக்காய்க்கு ரூ.36-க்கும் வெண்டைக்காய் கிலோ 16க்கும் புடலங்காய் கிலோ 28க்கும் பீர்க்கங்காய் கிலோ ரூ 28க்கும் பீட்ரூட் கிலோ 52க்கும் கேரட் கிலோ 54 க்கும் பீன்ஸ் கிலோ 783 முட்டைக்கோஸ் கிலோ 30க்கும் இஞ்சி கிலோ 60க்கும் விற்பனை செய்யப்பட்டன சின்ன வெங்காயம் கிலோ 20-க்கும் பெரிய வெங்காயம் கிலோ 27க்கும் விற்பனை செய்யப்பட்டன காய்கறிகளின் வரத்து அதிகரித்து இருந்ததால் அவற்றின் விலை குறைந்து காணப்பட்டதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர் குறிப்பாக கடந்த வாரம் கிலோ ரூ 14 விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோ வுக்கு ரூ. 2 ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்பட்டது இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad