நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் முன்னாள் அமைச்சர் தங்கமணி. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 26 July 2022

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் முன்னாள் அமைச்சர் தங்கமணி.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என நாமக்கல்லில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் மின்கட்டணம் சொத்து வரி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது முன்னாள் அமைச்சர் சரோஜா. சேகர் எம் எல் ஏ .முன்னாள் எம்எல்ஏ கே பி பி பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி தலைமை தாங்கி பேசியதாவது:


திமுக ஆட்சிக்கு வந்து 14 மாதங்களில் அனைத்து வகையான வரிகளையும் உயர்த்தி உள்ளது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மின் கட்டண உயர்வு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்தது ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த ஒரு வார காலத்துக்கு மின்வெட்டு வந்தது இதற்கு காரணம் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கின்றனர் இவர்கள் மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசின் மீது பழியை போட்டுவிட்டு நாங்கள் மின் கட்டணத்தை உயர்த்துகிறோம் என்று சொல்கிறார்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கே இல்லை என்பதற்கு கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் அரங்கறிய கலவரமே சாட்சி. 


இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவி தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது அனுப்பி அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை உடைத்து உள்ளனர் இதற்கெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 40 இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும் மத்திய அரசிடம் இருந்து ரூ 30,000 கோடி மானியம் வரவேண்டியுள்ளதாகவும் மின்கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் அந்த மானியத்தை பெற திமுக அரசு முயற்சித்து வருகிறது இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த தங்கமணி இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை நிறுத்த திமுக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது அவ்வாறு நிறுத்தினால் லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றார். மின் கட்டணம். சொத்து வரி. உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் பொன் சரஸ்வதி, கலாவதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாரதா, மாவட்ட பொருளாளர் டி எஸ் எஸ் காளியண்ணன், பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முரளி, மாவட்ட மாணவரணி செயலாளர் பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் கோபிநாத் ராஜா மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  


-  தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad