பெரியார் சிலை சேதம் வாகனம் மோதி உடைந்ததா? போலீசார் விசாரணை. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 25 July 2022

பெரியார் சிலை சேதம் வாகனம் மோதி உடைந்ததா? போலீசார் விசாரணை.

நாமக்கல் பிரதான சாலையில் அதிமுக சார்பில் கடந்த 1993 ஆண்டு பெரியார் அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டது. 


இந்த சிலைகளுக்கு தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் அதிமுக வினர் மரியாதை செலுத்தி வருகின்றனர் இந்த சிலையை சுற்றிலும் அரசு உத்தரவுப்படி இரும்புக்கூண்டும் வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் நேற்று மாலை பெரியார் சிலை மட்டும் சேதம் ஆகி இருப்பதைக் கண்டு அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.


இதை குறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதை அடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் அங்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர் அந்த சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதா? இல்லையெனில் வாகன மோதி சேதம் அடைந்ததா என்பதை கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


இதற்கு இடையே பெரியார் சிலை சேதம் அடைந்த தகவல் காட்டு தீ போல பறவையாதால் அங்கு ஏராளமான அதிமுகவினர் கூடினர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதாலும் பகலில் சம்பவம் நடைபெற்று இருப்பதாலும் வாகனம் மோதி சிலை சேதம் அடைந்து இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


- தமிழக குரல் நாமக்கல் மாவட்டசெய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad