அக்ரஹாரம் கிருஷ்ணர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் குடியிருப்போர் மற்றும் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கிடுக. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 29 July 2022

அக்ரஹாரம் கிருஷ்ணர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் குடியிருப்போர் மற்றும் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கிடுக.

பள்ளிபாளையம், அக்ரஹாரம் கிருஷ்ணர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் குடியிருப்போர் மற்றும் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கிடுக.


நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியத்தின் கலியனூர் மற்றும் அக்ரஹாரம் ஊராட்சி உட்பட்ட வண்ணாம்பாறை, செங்காடு பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிளை மாநாடு  P.நடேசன் தலைமையில் 29/ 7/ 2022 காலையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் P.பெருமாள் ஒன்றிய குழு பொறுப்பாளர்கள் சண்முகம், அண்ணாதுரை, சந்திரசேகர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கிளை மாநாட்டில் சங்கத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு குறித்து விளக்கப்பட்டது, மாநாட்டில் கீழ்கண்ட தோழர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர், தலைவர் P. நடேசன், செயலாளர் S. கார்த்திகேயன், பொருளாளர் P.சதாசிவம், உதவி தலைவர் S. ஆறுமுகம், உதவி செயலாளர் L. வாணி லோகநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிருஷ்ணர் கோவிலுக்கு சொந்தமான கோவில் நிலத்தில் குடியிருப்போர் மற்றும் சாகுபடி செய்பவருக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
  2. செங்காடு பகுதிக்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்திலிருந்து பாதை வசதி செய்து தர வேண்டும்.
  3. செங்காடு பகுதிக்கு காவிரி குடிநீர் வழங்கிட வேண்டும்.
  4. செங்காடு பகுதியில் ஏற்கனவே கட்டப்பட்ட தடுப்பணை  சிதிலடைந்துள்ளது, ஆகவே அதை முறைப்படுத்தி பாதுகாத்து நீரை தேய்க்கிட வேண்டும். 
  5. பொது கழிப்பிடம் மற்றும் சுகாதார வளாகம் அமைத்திட வேண்டும்.
  6. மேட்டூர்  கிழகரை வாய்க்காலில் தெற்கு பாளையத்திலிருந்து பிரியும் கிளை மெயின் வாய்க்காலில் முழுமையாக புதர் மண்டி குப்பைகள் கொட்டி கிடக்கிறது தூர்வாரி தண்ணீர் முழுமையாக வர பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad