தீபாவளி ஏல சீட்டு நடத்தி இலட்சக்கணக்கில் பண மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 26 July 2022

தீபாவளி ஏல சீட்டு நடத்தி இலட்சக்கணக்கில் பண மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்

பள்ளிபாளையம் அருகே தீபாவளி ஏல சீட்டு நடத்தி இலட்சக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவாகிவிட்டார் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிபாளையம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


பள்ளிபாளையம் அடுத்து வெளியேரசம்பாளையத்தை சேர்ந்தவர் சிவா கணேசன் இவர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஊர்க்காவல் படையில் வேலை செய்து வந்தார். சமீப காலமாக அந்தப் பணியில் இருந்து விலகிய இவர் ரியல் எஸ்டேட் எல்ஐசி முகவர் மற்றும் காய்கறி வியாபாரம் செய்து இது தவிர தேசபக்தி தினசரி நாளிதழ் நாமக்கல் மாவட்ட தலைமை நிருபராக பணியாற்றி வந்துள்ளார் இவர் தனது பெயருக்கு முன்பு டாக்டர் பட்டம் சேர்த்து இதை குறித்து யாராவது கேட்டால் கவர்னர் டாக்டர் பட்டம் என சொல்லி வந்துள்ளார்.


இந்நிலையில் கண்டிப்புதூர் பாறை ரோட்டில் பாலாஜி எண்டர்பிரைஸ் என்ற பெயரில் எலச்சீட்டு நிறுவனம் துவங்கி 100க்கும் மேற்பட்டோரை சேர்த்து பல்வேறு குறிப்புகளில் ஏல சீட்டு நடத்தியுள்ளார் மேலும் தீபாவளிச்சீட்டு துவக்கி வாரவாரம் பண வசூலித்துள்ளார் கடந்த ஒரு வாரமாக சிவ கணேசன் தீபாவளி ஏலச்சீட்டு பணம் வசூலுக்கு வரவில்லை அவரது அலுவலகமும் வீடும் பூட்டி கிடந்தது அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த பணம் கட்டிய பெண்கள் உட்பட 15 மேற்பட்டோர் சிவ கணேசன் தங்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாயுடன் தலைமறைவு ஆகிவிட்டதாக நேற்று பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரித்து வருகின்றனர். 


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad