தேசிய சிலம்பு போட்டியில் பள்ளிபாளையம் கலைத்தாய் மான மாணவிகள் தேசிய அளவில் முதலிடம். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 29 July 2022

தேசிய சிலம்பு போட்டியில் பள்ளிபாளையம் கலைத்தாய் மான மாணவிகள் தேசிய அளவில் முதலிடம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கலைத்தாய் பள்ளி மாணவ மாணவிகள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று முதல் இடம் பெற்று வந்தனர். நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய சிலம்பு போட்டியில் கலைத்தாய் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இதில் 21 மாணவர்கள் மாணவிகள் பங்கேற்று 6 பேர் பதக்கம் பெற்றார்கள் மேலும் சிலம்பு குழு போட்டி நடைபெற்றது.


30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர் இதில் பள்ளிபாளையம் கலைத்தாய் சிலம்பம் தேசிய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது பள்ளிபாளையம் கலைத்தாய் சிலம்பு பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் கராத்தேஆனந்த் அவர்களிடம் வெற்றி கோப்பையும் பரிசு தொகையையும் 10.000 வழங்கி கௌரவித்தார்கள். 


இந்த கலைத்தாய் பள்ளி மாணவர்கள் சென்ற ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக தமிழ் பண்பாட்டு சங்கம் நடத்திய கலாம் உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் நட்சத்திர சிலம்பம் 2 மணி நேரம் இடைவிடாமல் சுற்றி உலக சாதனை செய்து உள்ளார்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad