பாஜக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 25 July 2022

பாஜக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம் பாஜக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் வடிவேல் வரவேற்றார் மாநில செயற்கை குழு உறுப்பினர் தமிழரசி யோகம். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் விவசாய அணி மாவட்ட தலைவர் நடராஜன் நாமக்கல் நகர தலைவர் சரவணன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர், இதில் பாஜக மாநில துணைத்தலைவர் பிபி துரைசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.


அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது, மின் கட்டண உயர்வால் யாருக்கும் பாதிப்பு இல்லை என நிரூபக்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார் ஆனால் 12. சதவீதம் முதல் 51% சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

சொத்துவரி கட்டுமான பொருட்களின் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை சட்டசபையில் விவாதிக்காமல் திடீரென தமிழக அரசு விலைவாசியை உயர்த்தியுள்ளது கடந்த ஆட்சியாளர்கள் மீதும் மத்திய அரசு மீதும் பழி சுமத்தி விட்டு இவற்றை தமிழக அரசு செய்து வருகிறது கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கான உதாரணமாகும் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை பணியிட மாறுதல்  செய்திருப்பதன் மூலம் கலெக்டர் சரியான முறையில் இந்த விஷயத்தை கையாளாமல் விட்டதால் வன்முறை நடந்திருக்கிறது என்பதை அரசு ஒத்துக் கொண்டுள்ளது இவ்வாறு விபி துரைசாமி கூறினார். 


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் சத்திய பானு சேதுராமன் நாகராஜன் மாவட்டத் துணைத் தலைவர் முத்துக்குமார் விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சிலம்பரசன் மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயந்தி மாவட்டச் செயலாளர் திவ்யா துணைத்தலைவர் உஷாரணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்தியாளர் அந்தோணி

No comments:

Post a Comment

Post Top Ad