பரமத்தி வேலூர் அருகே 1 டன் ரேஷன் அரிசி கடத்தல் சரக்கு வாகன உரிமையாளர் கைது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 August 2022

பரமத்தி வேலூர் அருகே 1 டன் ரேஷன் அரிசி கடத்தல் சரக்கு வாகன உரிமையாளர் கைது.


பரமத்தி வேலூர் அருகே 1.டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமை பொருள் வளங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வாகனத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


நாமக்கல் கொடுமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பரமத்தி வேலூர் மோகனூர் சாலையில் உள்ள குப்புசாமி பாளையம் பஸ் நிறுத்தம் அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக தெரிய வந்தது இதைத்தொடர்ந்து வாகனத்தில் 22 பிளாஸ்டிக் சாக்கு போட்டிகளில் இருந்து 1100 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த அதன் உரிமையாளர் பாலப்பட்டி இந்திரா நகரை சேர்ந்த தினேஷ் குமார் வயசு 32 என்பவரை போலீசார் கைது செய்தனர்.


அவரிடம் ரேஷன் அரிசி எங்கிருந்து வாங்கி வரப்படுகிறது? இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா? என குடியுரிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad