மாவட்டத்தில் 1154 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.5 கோடியில் விலை இல்லா சைக்கிள்கள் அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 August 2022

மாவட்டத்தில் 1154 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.5 கோடியில் விலை இல்லா சைக்கிள்கள் அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் 1154 மாணவ மாணவிகளுக்கு ரூ 6  1/2 கோடியில் விலை இல்லா சைக்கிள்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று 2021-2022ஆம் கல்வி ஆண்டில் பிளஸ்- 1 படித்த மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது இதற்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார்.


இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு 446 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார் அப்போது அவர் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் பள்ளி கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து எண்ணற்ற புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக அறிவித்துள்ளார் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பொறியியல் மருத்துவம் சட்டம் வேளாண்மை உள்ளிட்ட தொழில் கல்வி நிறுவனங்களில் பயில 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டுடன் அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்க முதலமைச்சர் உத்தர் விட்டு உள்ளார் இதன் காரணமாக அரசு பள்ளிகளில் பயில்வது வறுமையின் அடையாளம் என்று நிலை மாறி தற்போது அரசு பள்ளிகளில் பயில்வது பெருமையின் அடையாளமாக உள்ளது மாணவ மாணவிகள் இந்த சைக்கிள்களை நல்ல முறையில் உபயோகப்படுத்தி பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் வர வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.


இதேபோல் சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 294 மாணவர்களுக்கும் நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 27 மாணவிகளுக்கும் ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 27 மாணவ மாணவிகளுக்கும் என மொத்தம் 1154 மாணவிகளுக்கு ஆறு கோடியே 59 லட்சம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார் இந்த நிகழ்ச்சிகளில் பொன்னுச்சாமி எம்எல்ஏ முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு சுப்பிரமணியன் நகராட்சி தலைவர்கள் கலாநிதி கவிதா சங்கர் முன்னாள் எம்எல்ஏ கேபி ராமசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தலைமை ஆசிரியர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad