ராசிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 August 2022

ராசிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலையில் வைப்பது மற்றும் அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது கூட்டத்துக்கு ராசிபுரம் துணை போலி சூப்பிரண்டு செந்தில் குமார் தலைமை தாங்கினார் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுகவனம் சிவசங்கரன் ஹேமாவதி மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் சிலை வைப்பதற்கான முன் அனுமதி கரைக்கப்படும் இடங்கள் நேரம் பாதுகாப்பு ஏற்பாடுகள் போக்குவரத்து விதிமுறை குறித்து விவாதிக்கப்பட்டது மேலும் சிலைகளின் மாசற்ற தன்மையை உறுதி செய்ய வேண்டும் ஒலிபெருக்கி மற்றும் சிலை வைப்பதற்கு போலீஸ் நிலையத்தில் தடையின்மை சான்று பெற வேண்டும் 10 அடி உயரத்திற்கு மேல் சிலைகள் வைக்க கூடாது சிலை வைத்த மூணாவது நாளில் நீர் நிலைகளில் அவற்றை கரைக்க எடுத்துச் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad