நாமக்கல்லில் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு 2 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 August 2022

நாமக்கல்லில் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு 2 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை.

நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் கண்காணிப்பில் சிலம்பம் சுற்றுவதில் உலக சாதனை நிகழ்ச்சி நேற்று நாமக்கல்லில் நடந்தது இதில் நாமக்கல் சேலம் ஈரோடு திருப்பூர் நாகப்பட்டினம் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 6 முதல் 27 வயது வரை உள்ள 218 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு சிலம்பும் சுற்றினார்.


நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவன முதன்மை அதிகாரி வினோத் தமிழக முதன்மை தொகுப்பாளர்கள் ஜனனி ஸ்ரீ பரத் குமார் ஆகியோர் முன்னிலையில் சாதனை நிகழ்த்தப்பட்டது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் இடைவிடாமல் சுற்றி மாணவ மாணவிகள் சாதனையை படைத்தனர் இதற்கு முன் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றுவதில் 1 1/2 மணி நேரம் மட்டுமே உலக சாதனையாக இருந்து வந்தது தற்போது கூடுதலாக 1/2 சிலம்பம் சுற்றிய மாணவ மாணவிகள்  புதிய உலக சாதனை படைத்து இருப்பதாக நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு கொங்கு நாட்டு வேளாளர் சங்கத் தலைவர் வெங்கடாசலம் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad