வல்வில் ஓரி விழாவில் ரூ. 2 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கினார் மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 4 August 2022

வல்வில் ஓரி விழாவில் ரூ. 2 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.

கொல்லிமலையில் நேற்று நடந்த வல்வில் ஓரி நிறைவு விழாவில் 284 பயனாளிகளுக்கு ரு.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங்க் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழா சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது இரண்டாவது நாளான நேற்று கிராமப்புற விளையாட்டுகளான உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகளை பொன்னுச்சாமி எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்து பார்வையிட்டார் பின்னர் வல் வில் ஓரி விழாவில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.


அதனைத் தொடர்ந்து வல்வில் ஓர் அரங்கில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் கூட்டுறவு துறை சார்பில் 131 பயனாளிகளுக்கு ரூ34 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் மகளிர் சுய உதவி குழு கடன் உதவிகளையும் மகளிர் திட்ட துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ94 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் கடன் உதவிகளையும் வழங்கினார் இதே போல் மாவட்ட ஊராக வளர்ச்சி முகாமின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ 33 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவி உட்பட மொத்தம் 284 பயனாளிகளுக்கு ரூ 2 கோடியே ஒரு லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.


இதேபோல் வல்வில் ஓரி அரங்கில் அமைக்கப்பட்ட அரசு துறைகளில் பணி விளக்க கண்காட்சியில் சிறப்பாக அரங்கம் அமைத்ததற்காக முதலிடம் பெற்ற சித்த மருத்துவத்துறைக்கும் 2இடம் பெற்ற பட்டு வளர்ச்சி துறைக்கும்3 இடம்பெற்ற காவல்துறைக்கும் கேடயம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கலை நிகழ்ச்சி நடத்திய மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.


விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவில் கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மாதேஸ்வரி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பிரகாஷ் உதவி கலெக்டர்கள் மஞ்சுளா இளவரசி சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தேவி கா ராணி மாவட்ட வளங்கள் அலுவலர் ரமேஷ் சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad