சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது திராவிடர் விடுதலைக் கழகத்தினர் போலீஸில் புகார். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 4 August 2022

சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது திராவிடர் விடுதலைக் கழகத்தினர் போலீஸில் புகார்.

பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன்  மீது திராவிடர் விடுதலைக் கழகத்தினர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 


இதைக் குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் அ. முத்துப்பாண்டி கூறியதாவது இந்து முன்னணி அமைப்பு கடந்த ஒரு மாத காலமாக இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரம் பயணம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர் இந்து முன்னணி மாநில தலைவர் நடைபெற்றது கடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவர் சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கலந்து கொண்டு பேசினார் பெரியாரின் சிலை இன்று உடைக்கப்படுகிறது அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசியிருக்கிறார். 


இது இரு சமூகங்களுக்கு இடையே பகையை உருவாக்குவதாகவும் மத உணர்வை கிளறிவிட்டு சமூக அமைதியை சீர்குலைப்பதாகவும்சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும் உள்ளது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனுவை கொடுத்தனர் .


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி

No comments:

Post a Comment

Post Top Ad