காவேரியில் வெள்ளப்பெருக்கு ஐம்பது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 4 August 2022

காவேரியில் வெள்ளப்பெருக்கு ஐம்பது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குமாரபாளையத்தில் 50 க்கு மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது இதனால் பொதுமக்கள் பரிசில் மூலம் மீட்க்கப்பட்டனர்.


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான கேரளா கர்நாடக மற்றும் தமிழக பகுதிகளான தேன் கனி கோட்டை அஞ்சான் செட்டி பிலிகொண்டலூர் ஆகிய இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது இந்த நீர்வரத்து மேலும் படிப்படியாக உயர்ந்து நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்தது இதனிடையே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது அதன்படி அணையே ஒட்டிய மின் நிலையம் மற்றும் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டது இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனுடைய காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது மேலும் ஆடிப்பெருக்கையொட்டி காவேரி ஆற்றில் குளிக்கவும் தடை விதித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டார்.


மேலும் குமாரபாளையத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் நடவடிக்கையில் எடுக்கப்பட்டன மேலும் வெள்ளப்பெருக்கு குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது இந்த நிலையில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று இரவு  குமாரபாளையத்தில் கரையோர பகுதிகளை ஒட்டி தாழ்வான பகுதிகளான கலைமகள் வீதி, இந்திரா நகர், மணிமேகலை வீதி மற்றும் அண்ணா நகரை தண்ணீர் சூழ்ந்துள்ளது மேலும் அந்த பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது அந்த பகுதியில் வசித்த பொதுமக்களில் பெரும்பாலானோர் இடத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில் சிலர் வீடுகளில் சிக்கிக் கொண்டனர், வெளியே வர முடியாமல் தவித்த அவர்கள் பரிசல்கள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் தற்போது அந்த பகுதியில் வசித்த 130 பேர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிக அருகில் தெரிவித்தனர்.


இதனிடையே நேற்று மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது இதனால் குமாரபாளையத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்து வெள்ளம் வடியாமல் உள்ளது இதன் காரணமாக பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad