இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் மோட்டார் சைக்கிள் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 4 August 2022

இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் மோட்டார் சைக்கிள் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

சேந்தமங்கலத்தில் இரு சமூகத்தினர் அடியே ஏற்பட்ட மோதலில் மோட்டார் சைக்கிள் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விலங்கு வருகிறது இந்த மழையே ஆண்ட வல்வில் ஓரி மன்னனை போற்றும் வகையில் விழா நேற்று முன்தினம் தொடங்கியது இதை ஒட்டி விழாவில் பங்கேற்க ஒரு சமூகத்தினர் சேந்தமங்கலம் வழியாக கொல்லிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர் அந்த சமூகத்தினரை வரவேற்கும் விதமாக சேந்தமங்கலம் வண்டிப்பேட்டை ரவுண்டானாவில் கொடிக்கம்பங்கள் நடப்பட்டு  இருந்தன.


இந்த நிலையில் அங்கு வந்த சம்பந்தப்பட்ட சமூகத்தினர் தங்களது வாகனங்களில் ரவுண்டானாவை சுற்றி வந்து உற்சாகமாக கோஷமிட்டதாக கூறப்படுகிறது இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது அப்போது அங்கு வாகனத்தில் மற்றொரு சமூகத்தினர் வந்தனர்.


இதனுடைய அங்கு நடப்பட்ட கொடிக்கம்பம் ஒன்று அகற்றப்பட்டது இதனால் இது சமூகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது அவர்கள் கையாளும் கற்களையும் வீசியும் பயங்கரமாக தாக்கி கொண்டனர் மேலும் அங்கு நிறுத்திப்பட்டு இருந்த கார் கண்ணாடியில் மற்றும் மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்குப்பட்டது இதனால் அங்கு பதற்றமும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது இதை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து நலபுரமும் சிதறி ஓடினர் மேலும் கடைகளும் அடைக்கப்பட்டன.


இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பர் அண்ட் சுரேஷ் சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில் குமார் வருவாய் ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர் ஆனால் போலீசார் வருவதற்குள் அங்கு மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் தப்பி ஓடி விட்டனர் இதை அடுத்து அங்கு பதற்றத்தை தணிக்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர்.


அவர்கள் சேந்தமங்கலம் பகுதியில் தீவிரல் ரோந்து பணியில் ஈடுபட்டனர் இந்த தொடர்பாக சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad