கொண்டிசெட்டிபட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகளை மேலாண்மை இயக்குனர் ஆய்வு. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 August 2022

கொண்டிசெட்டிபட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகளை மேலாண்மை இயக்குனர் ஆய்வு.

நாமக்கல் அடுத்த கொண்டிசெட்டிபட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டி செட்டி பெட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அடித்து மாதிரி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது இதனை வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது குடிநீர் வசதி மின்சார வசதி ஆகியவை சீராக வழங்கப்படுகிறதா? என்பதே அங்குள்ள வீடுகளில் குடியிருந்து வருபவர்களிடம் மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் கேட்டறிந்தார் மேலும் அடிப்படை வசதிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை வாரியத்திற்கு தெரியப்படுத்துங்கள் உடனடியாக வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும் என அவர் அங்கிருந்து குடியிருப்பவாசிகளிடம் தெரிவித்தார்.


முன்னதாக திருச்செங்கோடு தாலுக்கா வர ஊரம்பட்டியில் பட்டேல் நகர் திட்டப்பகுதியில் 848 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும் ராசிபுரம் தாலுக்கா அணைப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளையும் மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார் இதை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடந்தது கலெக்டர்  ஸ்ரேயா சிங்க் முன்னிலை வகித்தார்.


கூட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் குடியிருப்பு ஒதுக்கீடுகள் மற்றும் பயனாளிகள் தேர்வு செய்த ஆவணங்களையும் மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார் அப்போது அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணியை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார் மேலும் காலியாக உள்ள வீடுகளுக்கு தகுதியான பயனாளிகளை விரைவில் தேர்வு செய்து குடி அமர்த்தமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர்கள் மஞ்சுளா இளவரசி தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் சுந்தர்ராஜன் மேற்பார்வை பொறியாளர் ரவிக்குமார் நிர்வாக பொறியாளர் தனசேகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.



- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad