கண்ணில் மிளகாய் பொடி தூவி கொங்கு மக்கள் தேசிய கட்சி இளைஞர் அணி தலைவர் காரில் கடத்தி கொலை. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 August 2022

கண்ணில் மிளகாய் பொடி தூவி கொங்கு மக்கள் தேசிய கட்சி இளைஞர் அணி தலைவர் காரில் கடத்தி கொலை.


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கண்ணில் மிளகாய் பொடி தூவி கொங்கு மக்கள் தேசிய கட்சி இளைஞர் அணி தலைவர் காரில் கடத்தப்பட்டார் அவரை கடத்திய மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பாதரை செட்டி காரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கௌதம் வயது (36) இவருடைய மனைவி திவ்யா பாரதி வயசு 29.  கௌதம் வெப்படியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார் மேலும் அவர் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒன்பது முப்பது மணிக்கு கௌதம் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு பாதுரையில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார் அப்போது வீட்டின் அருகே இருட்டான பகுதியில் மறைந்து இருந்த மர்ம நபர்கள் கௌதம் கண்ணில் மிளகாய் பொடியை தூவினர் இதனால் அவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார்.


இதை அடுத்து அந்த மர்மம் கும்பல் தாங்கள் வந்த காரில் கௌதமி ஏற்றி அங்கிருந்து மின்னல் வேகத்தில் கடத்தி சென்றது இரவு வெகுநேரமாகியும் கௌதம் வீடு திரும்பாததால் அவருடைய மனைவி திவ்யபாரதி அவரது செல்போனை தொடர்பு கொண்டார் அப்போது பேசிய மர்ம நபர்கள் நாங்கள் கௌதம் கடத்தி விட்டோம் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யபாரதி இதைக் குறித்து உடனடியாக வெப்படை போலீசுக்கு தகவல் தெரிவித்தார் அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர் அப்போது வீட்டின் அருகே கௌதமின் செருப்புகள் மோட்டர் சைக்கிள் கிடந்ததால் அவர் கடத்தப்பட்டது உறுதியானது.


இதுகுறித்து அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் மேலும் மோப்பநாகியும் வரவழைக்கப்பட்டது அது வீட்டின் அருகே மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது ஆனால் யாரையும் கவி பிடிக்கவில்லை இதனுடைய திவ்யபாரதியிடம் போலீசார்  விசாரித்தனர் அப்போது அவர் தனது கணவரின் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இரண்டு பேர் வரவு செலவு கணக்குகளில் முறைகேடு செய்தனர் இதனால் எனது கணவர் அவர்களை கண்டித்தார் இதன் காரணமாக அவர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது என தெரிவித்தார்.


இந்த தகவலின் பெயரில் கௌதமின் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் 2 ஊழியர்களை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள் இதனிடையே கடத்தலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி தலைமையில் நாலு தனி படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ் வி உத்தரவிட்டுள்ளார் தனிப்படையினர் நிதி நிறுவன வரவு செலவு பிரச்சனையில் கௌதம் கடத்தப்பட்டாரா? அல்லது தொழில் போட்டியால் கடத்தப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம கும்ப கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர் மேலும் கடத்தல் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர் கொங்கு மக்கள் தேசிய கட்சி இளைஞர் அணி தலைவர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பாதரை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடத்தப்பட்ட கெளதம் கொல்லப்பட்டு அருகிலிருந்த ஏரியில் அவரது, சடலம் வீசப்பட்டது, அவரின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்துவருகின்றனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad