கொல்லிமலை மாற்றுப்பாதையில் அரசு பஸ் தடுப்பூரின் மோதி விபத்து மாணவர்கள் பயணிகள் காயங்கள் இன்றி தப்பினர். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 23 August 2022

கொல்லிமலை மாற்றுப்பாதையில் அரசு பஸ் தடுப்பூரின் மோதி விபத்து மாணவர்கள் பயணிகள் காயங்கள் இன்றி தப்பினர்.

கொல்லிமலையில் உள்ள அயல்நாடு எடை புள்ளி நாடு வரைக்காடு சித்தூர் நாடு திருப்பலி நாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மாற்று பாதை அதிகாரத்தில் உள்ள முள்ளுக்குறிச்சி நாமகிரிப்பேட்டை ராசிபுரம் பகுதியில் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர், இந்த நிலையில் நேற்று காலை செங்கரை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பஸ்ஸில் மாணவ மாணவிகள் முள்ளுக்குறிச்சி அடிவாரம் வழியாக பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்தனர் அப்போது மேல் பூசணி குளிப்பாட்டி அருகி வந்தபோது பஸ் திடீரென பழுதடைந்து நிலை தடுமாறி  ஓடி அங்குள்ள ஒரு தடுப்பு சுவரில் மோதி நின்றது.


இந்த விபத்தால் பஸ்ஸில் இருந்த மாணவ மாணவிகள் அபாய குரல் எழுப்பினர் எனினும் பஸ்ஸில் இருந்த மாணவ மாணவிகள் பயணிகள் காயங்கள் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் டிரைவர் குணசேகரனின் சாமர்த்தியத்தால் அங்கு பெரும் விபத்து நடக்க இருந்தது தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது இந்த விபத்து தொடர்பாக செங்கரை போலீசார் விசாரணை நடத்தினர், மேலும் பஸ்ஸில் இருந்த மாணவ மாணவிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad