பாரதிய ஜனதா சார்பில் வீடு வீடாக தேசியக்கொடி விநியோகம் மாநில தலைவர் வி பி துரைசாமி பங்கேற்பு. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 9 August 2022

பாரதிய ஜனதா சார்பில் வீடு வீடாக தேசியக்கொடி விநியோகம் மாநில தலைவர் வி பி துரைசாமி பங்கேற்பு.


75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுவித்தார் இதை வலியுறுத்தும் விதமாக நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் நாமக்கல் பிரசன்னா நகரில் பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


இதற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார் மாநில துணைத்தலைவரும் நாமக்கல் மாவட்ட  பார்வையாளருமான வி பி துரைசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களின் வீடுகளுக்கு சென்று தேசிய கொடியை வழங்கினார்.


இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் மாவட்ட பொதுச் செயலாளர் சத்திய பானு வடிவேலு மாவட்டத் துணைத் தலைவர் முத்துக்குமார் நகர தலைவர் சரவணன் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் சிலம்பரசன் மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயந்தி அரசு தொடர்பு பிரிவு சுரேஷ் கண்ணன் மருத்துவ பிரிவு மாவட்ட செயலாளர் பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்


- தமிழக குரல் செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad