சேந்தமங்கலம் அருகே பாழடைந்த வீட்டில் 13 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் போலீசார் விசாரணை. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 15 September 2022

சேந்தமங்கலம் அருகே பாழடைந்த வீட்டில் 13 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பால் அடைந்த வீட்டில் ரேஷன் அரிசி பதிக்க வைத்திருப்பதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது அதன் பேரில் வருவாய் ஆய்வாளர் தங்கராஜ் முத்துக்காப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மோகனப்பிரியா ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் அந்த வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். 


அப்போது அந்த வீட்டில் 13 மூட்டைகளில் 830 கிலோ. ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து சேந்தமங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் முத்துக்குமாரிடம் ஒப்படைத்தனர் மேலும் அங்கு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad