மோகனூர் காவிரி ஆற்றுப்பாலத்தில் போலீஸ் பாதுகாப்பு. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 14 September 2022

மோகனூர் காவிரி ஆற்றுப்பாலத்தில் போலீஸ் பாதுகாப்பு.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. பதவியை ராஜினாமா செய்யக்கோரி பாஜக கரூரில் ஆர்ப்பாட்டம், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டின் தடையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.


இந்த நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியே ராஜினாமா செய்யக்கோரி பாஜக சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது, இதைத் தொடர்ந்து நாமக்கல் பகுதியில் இருந்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்திற்கு செல்லாமல் தடுப்பதற்காக மோகனூர் காவிரி ஆற்றுப்பாலத்தில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


அந்த வழியில் செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார் நிறுத்தி கடும் சோதனைக்கு பின்பு அனுமதித்தனர் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad