நாமக்கல்லில் வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 September 2022

நாமக்கல்லில் வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் பூங்கா சாலையில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஈஸ்வரி தலைமை தாங்கினார் இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர். 


ஆர்ப்பாட்டத்தில் ஈஸ்வரி பேசும்போது நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டுமனை பட்டா இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வரும் ஏழை .எளிய பெண்களிடம் இலவச வீட்டுமனைக்கான விண்ணப்பங்களை பெற்று கலெக்டர் அலுவலகத்தில் மனுவாக கொடுத்துள்ளோம், கடந்த நாலு மாதங்களில் மட்டும் சுமார் 700 மனுக்களை கொடுத்து இருக்கிறோம் இதற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார் முன்னதாக அவர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் ஆனால் போலீசார் அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad