முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கையால் மின் ஆளுமை திட்டங்களில் தமிழகம் 2 வது இடத்தைப் பிடித்துள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ் பெருமிதம். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 23 September 2022

முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கையால் மின் ஆளுமை திட்டங்களில் தமிழகம் 2 வது இடத்தைப் பிடித்துள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ் பெருமிதம்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கையால் மின் ஆளுமைத் திட்டங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்து இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் பெருமிதத்துடன் கூறினார்.


நாமக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தகவல் தொழில்நுட்பியில் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடந்தது மாவட்ட கலெக்டர் சுரேஷ் கே ஆர் என் ராஜேஷ்குமார் எம்பி பொன்னுச்சாமி எம்எல்ஏ அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மின் அலுவலகம் திட்டத்தின் கீழ் வருவாய் துறை ஊரக வளர்ச்சி துறை பேரூராட்சியில் உள்ளிட்ட 22 வெவ்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் 854 அலுவலர்களுக்கு தனியாக மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டு அவர்கள் தங்களது மின்னணு கையொப்பம் அளிக்க மின்னணு பயனர் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சரின் நடவடிக்கைகளால் மின் ஆளுமைத் திட்டங்களில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் 17வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.


மிக விரைவில் முதலிடம் பெரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மின் அலுவலகம் என்பது அரசு அலுவலகங்களில் உள்ள வழக்கமான பணிகளை தனியாக அனுமதிக்கும் பயன்பாட்டு தொகுப்பாகும் இந்த மென்பொருளில் உள்ள தணிக்கை மற்றும் வரலாற்று அம்சங்கள் வெளிப்படையை தன்மையை அதிகரிக்கின்றன அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் மின் அலுவலக மென்பொருள் பயன்பாட்டை தமிழக மின் ஆளுமை முகாமை நடைமுறைப்படுத்த உள்ளது இந்த ஆண்டுக்குள் 300-க்கும் மேற்பட்ட அரசுத்துறை சார்ந்த சேவைகளை மின்னணு உருவாக்கம் செய்து இ சேவை மையம் மூலம் வழங்க உள்ளோம், முதல் கட்டமாக தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைகளிலும் மின் அலுவலக மென்பொருளை செயல்படுத்த ஏதுவாக 3645 ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் உள்ளது தொடர்ந்து அனைத்து துறை தலைமையகங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மற்றும் அதன் கீழ் உள்ள அலுவலகங்கள் மின் அலுவலகம் மென்பொருள் நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. 


அரசு அலுவலர்களுக்கு அலுவலக தகவல் தொடர்புக்கு பயன்படுத்த பாதுகாப்பான மின்னஞ்சல் சேவை வழங்கப்பட்டுள்ளது தற்போதைய மின்னஞ்சல் சேவையை மேம்படுத்தி மாநில முழுவதும் கூடுதலாக 50 ஆயிரம் பயனாளர்களுக்கு மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இவ்வாறு அவர் பேசினார்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி

No comments:

Post a Comment

Post Top Ad