நாய் குறுக்கே வந்ததால் தனியார் நிறுவனம் மேலாளர் பலி. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 21 September 2022

நாய் குறுக்கே வந்ததால் தனியார் நிறுவனம் மேலாளர் பலி.

கோவை சாய்பாபா காலனி காந்தி நகரை சேர்ந்தவர் குமாரசாமி வயசு 50 இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பள்ளக்கா பாளையத்தில் குடிநீர் வடிகால் வாரிய கட்டுமான பணி ஒப்பந்ததாரர் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.


இவர் நேற்று காலை 11:30 மணி அளவில் குமராபாளையத்திலிருந்து பள்ளக்கா பாளையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் அப்போது குமராபாளையம் பவர் ஹவுஸ் அருகே சென்றபோது முன்னாள் சென்ற அரசு டவுன் பஸ் முந்தி செல்ல முயன்றார் அப்போது தெருநாய் ஒன்று சாலையில் குறுக்கே ஓடி வந்து மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த குமாரசாமி அரசு பஸ்ஸின் பின் சக்கரத்தில் சிக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் தலை நசுக்கி இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். 


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்துக்கு சென்ற குமாரபாளையம் போலீசார் குமாரசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான குமாரசாமிக்கு  வைதேகி என்ற மனைவியும் நிவேதா என்ற மகளும் அபினேஷ் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி

No comments:

Post a Comment

Post Top Ad