அதிமுகவை அழிக்க தி.மு.க.வினர் சூழ்ச்சி சசிகலா குற்றச்சாட்டு. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 14 September 2022

அதிமுகவை அழிக்க தி.மு.க.வினர் சூழ்ச்சி சசிகலா குற்றச்சாட்டு.

சேலத்தில் இருந்து நேற்று மாலை பள்ளிபாளையம் வந்த சசிகலாவிற்கு பேரவையின் மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமையில் பள்ளிபாளையத்தில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது பின்னர் சசிகலா சசிகலா வேணில் இருந்தபடியே பேசினார்.


திமுக ஆட்சிக்கு வந்து எந்த நல்ல திட்டங்களையும் மக்களுக்கு செய்யவில்லை இதை செய்தேன் அதை செய்வேன் என்று மேடைக்கு மேடை வசனம் பேசியும் வருகிறார்கள். மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்று அடையவில்லை அவர்கள் ஆட்சியில் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு மின் கட்டண உயர்வு வீட்டு வாடகை உயர்வு போன்றவற்றை தான் தர முடிந்தது மேலும் தினசரி தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளும் போதை பொருள் விற்பனை திருட்டு போன்றவை நடப்பதாக செய்திகள் வந்தபடி உள்ளன. 


எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செய்துள்ளனர் அதை மக்கள் மறக்க மாட்டார்கள். தி.மு.கவினர் அ.தி.மு.க.வை அளிக்க சூழ்ச்சி செய்து வருகின்றனர். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. ஒன்றுபடுவார்கள் என்று உறுதியாக கூறுகிறேன் மக்கள் விரோத திமுகவை எதிர்ப்பது தான் நமது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். கொஞ்ச காலம் பொறுத்திருங்கள் விரைவில் நம்முடைய ஆட்சி அமையப்போவது. நான் உங்களோடு இருக்கிறேன் உங்கள் குடும்பத்தோடு ஒருவராக இருக்கிறேன் பிரிந்து சென்றவர்கள் தாய் உள்ளத்தோடு மீண்டும் கொண்டு வந்து இந்த இயக்கத்துக்காக பாடுபட்ட அனைவரையும் ஒன்றிணைந்து வலிமையான பேரி இயக்கமாக மாற்றுவதே எனது ஒரே குறிக்கோள். அதிமுகவை ஆட்சியில் அமர வைக்கும் வரை நான் ஓயமாட்டேன். இன்றைக்கு நடக்கும் மக்கள் விரோத ஆட்சியை தள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள். எம்ஜிஆர் ஜெயலலிதாவையும் மனித இனம்  உள்ளவரை எவரும் மறக்க மாட்டார்கள். கழகத் தொண்டர்கள் ஒத்துழைப்புடன் நிச்சயமாக அதிமுகவை மீட்பேன்.


இவ்வாறு அவர் பேசினார் நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் கோபால் மற்றும் சசிகலா பேரவை மற்றும் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad