நாம் தமிழர் கட்சி சார்பில் நகராட்சியில் மனு. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 28 September 2022

நாம் தமிழர் கட்சி சார்பில் நகராட்சியில் மனு.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நாம் தமிழர் கட்சி சார்பில் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது குமாரபாளையம் நகராட்சியில் மழைக்காலம் துவங்க உள்ளதால் அனைத்து பகுதிகளும் கொசு மருந்து அடிக்க வேண்டும் அம்மன் நகர் திருவள்ளுவர் வீதியில் வடிகால் ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. 


இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை குமரவளையம் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் ராஜேந்திரன் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைத்தலைவர் வருண் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.


இதில் மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர் யுவராணி தொகுதி செயலாளர் சத்யமூர்த்தி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் அசோகன் நகரச் செயலாளர் பாலாஜி நிர்வாகி பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


-தமிழக குரல் செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad