பள்ளிபாளையம் அருகே 24 மணி நேரமும் காவல்துறை துணையுடன் சட்டவிரோதமாக மது விற்பனை அமோகம். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 8 October 2022

பள்ளிபாளையம் அருகே 24 மணி நேரமும் காவல்துறை துணையுடன் சட்டவிரோதமாக மது விற்பனை அமோகம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான ஓடை பள்ளி காவேரி பள்ளிபாளையம் பேருந்து நிலையம் ஆவரங்காடு அரசு மருத்துவமனை குட்ட முக்கு பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை என்பது அமோகமாக நடைபெற்று வரும் நிலையில் மதிப்பிற்பனையை தடுத்து நிறுத்திட வேண்டுமென பல்வேறு முறை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பள்ளிபாளையம் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கை எடுக்க மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை சட்டவிரோதமாக சந்து கடை என்கிற பெயரில் மது விற்பனை என்பது அமோகமாக நடைபெற்று வருகிறது.


இது குறித்து பெண்கள் கூறிய போது அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது மது பிரியர்கள் மதுவினை குடித்துவிட்டு அப்பகுதியில் அடிக்கடி தகராறு செய்வதாகவும் இதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்சி வருகின்றனர்.


இதுகுறித்து செய்தியாளர்கள் செய்தி சேகரித்து செய்தி ஒளிபரப்பிய போது காவல்துறை சார்பிலும் மதுபான பாரின் உரிமையாளர்கள் இணைந்து செய்தியாளர்களை மிரட்டுவது வாடிக்கையாக உள்ளது சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனை மற்றும் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் காவலர்களை மாறுதல் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


 - தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad